இளம் செஞ்சிலுவைச் சங்கம் (Junior Red Cross)-பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமான சேவை நோக்கத்தைக் கொண்டு வருவதற்காக இளம் செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கப்படுகிறது. இக்குழுக்களில் ஈடுபாடு கொண்ட 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுகின்றனர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அஹமது அவர்களின் அறிவுரையின் பேரில், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த பயிலரங்க நிகழ்ச்சி இன்று காலை பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி தலைமை உரை நிகழ்த்தினார். 'அதிரை நியூஸ்' ஆசிரியர் சேக்கனா நிஜாம், அதிரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் இத்ரீஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளி தமிழ் ஆசிரியர் முனைவர் அஜீமுதீன் வரவேற்புரை ஆற்றினார்.
பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பயிற்றுனர் திரு. துளசி துரை மாணிக்கம் அவர்கள் மாணவர்களுக்கு முதலுதவி செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் பயிற்சி மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, மயக்கம், தீ விபத்தில் சிக்கியவர்கள், எலும்பு முறிவு, விஷ வாயுவில் சிக்கியவர்களை மீட்பது, நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது மற்றும் வலிப்பு நோய் குறித்தும் அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கத்தில் கூறப்பட்டன.
நிகழ்ச்சி முடிவில் பள்ளி ஆசிரியர் எஸ் குணசேகரன் நன்றி கூறினார். இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

நாட்டு நலப்பணித் திட்டம் (National Service Scheme)- மாணவர்களுக்கு சமூக நல எண்ணங்களை கற்பிக்கவும்,எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்வதன் நோக்கத்தில் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
தேசிய பசுமைப் படை(National Green Corps)- பள்ளி மாணவர்களை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
சிகப்பு நாடா சங்கம்(Red Ribbon Club) -எய்ட்ஸ் நோய் பற்றியும், அதன் கொடிய விளைவுகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் நோக்கமாக கொண்டு மாணவர்கள் இதில் உறுப்பினராக வாய்ப்பளிக்கப்படுகிறது.
சாரணர் இயக்கம்(Scouts)- பள்ளிப்படிப்பின்போது வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை, தேசப்பற்று, நேசம் , மரியாதை, தைரியம் மற்றும் குடிமையுணர்வு போன்றவற்றில் மாணவர்கள் மேம்பட இதன்மூலம் வாய்ப்பளிக்கப்படுகிறது

No comments:
Post a Comment