Tuesday, June 18, 2013

பள்ளி வரலாறு

             தஞ்சவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் தவம் இருந்து பெற்ற தவப்புதல்வரும், புகழ்பெற்ற வணிகரும், நிலக்கிழாரும், அறிவுள்ளம் படைத்த பெருந்தகையுமான, மறைந்த ஹாஜி ஜனாப் எம்.கே.என்.காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்கள் 1900 ஆம் ஆண்டு தனது நன்செய், புன்செய் நிலங்களை அறத்திற்காக வழங்கி எம்.கே.என்.மதரஸா என்ற அறநிலையத்தை தோற்றுவித்தார்கள். அன்னாரைப் பின்பற்றி அன்னாரின் உடன்பிறப்புகளான சகோதரர்கள்,

1) ஜனாப் நெய்னா முகம்மது லெப்பை மரைக்காயர்
2) ஜனாப். எம்.கே.என்.அகமது தம்பி மரைக்காயர்
3) ஹாஜி ஜனாப்.எம்.கே.என்.சேக் சலாத் லெப்பை மரைக்காயர்


ஆகியோரும் தங்கள் நன்செய்,புன்செய் நிலங்களை நன்கொடையாக வழங்கி உதவினார்கள்.

நிர்வாகம்  :     

      இந்த அறநிலையத்தை நிர்வகிக்க பரம்பரை (மேர்கூறப்பட்டவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள்) 6 உறுப்பினர்களும் இவர்கள் குடும்பமல்லாத உள்ளூர்வாசிகள் 3 உறுப்பினர்களும் தஞ்சாவூர் நீதிமன்றத்தால் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை டிரஸ்டிகளாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.

பள்ளியின் வளர்ச்சி :

       இந்த அறநிலைய நிர்வாகத்தின் கீழ் காலம் சென்ற தாளாளர் அதிரை கல்வித்தந்தை மர்ஹூம் ஹாஜி ஜனாப். எஸ்.எம்.எஸ். சேக் ஜலாலுதீன் அவர்கள் தன்னுடைய சீரிய முயற்சியால் இப்பள்ளி துவங்கப்பட்டது.

1) முதலில் 25.06.1949 இல் நடுநிலைப்பள்ளியாக (6 முதல் 8 ஆம் வகுப்பு வரை) இருபாலர்களுக்கும் மறைந்த மர்ஹூம் காயிதே மில்லத் ஜனாப். முகம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.

2) பிறகு 1950 ஜூன் மாதம் முதல் உயர் நிலைப்பள்ளியாக (6 முதல் 10 ஆம் வகுப்பு வரை) முன்னேறியது.

3) பின்பு 01.07.1978 முதல் இன்று வரை அரசு உதவிப்பெறும் மேல் நிலைப்பள்ளியாக (12 ஆம் வகுப்பு வரை) வளர்ந்ததுள்ளது.

             கல்வியில் பின்தங்கிய அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு சாதி மத வேறுபாடு இன்றி கல்வி அளித்து இப்பள்ளி வைர விழாக் கண்டுள்ளது. தற்போது காலச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு இருபாலர் பள்ளியாக இருந்த இப்பள்ளியிலிருந்து பெண்களை பிரித்து பெண்களுக்கென்று தனியொரு மேல்நிலைப் பள்ளியை துவக்கி, இப்பள்ளி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டு கல்விப்பணி செய்து வருகிறது.

                   இத்துடன் இவ்வறநிலையத்தின் ஆதரவில் செயல்பட்டு வரும் இப்பள்ளியின் உடன்பிறந்த கல்வி நிறுவனங்கள்,
  • சலாஹிய்யா அரபிக் கல்லூரி 
  • காதிர் முகைதீன் கல்லூரி 
  • காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

       மேலும் தொடர்ந்து இதன் கல்விப்பணியை  இறைவன் நாடினால் இறுதிநாள்வரை செவ்வனே செய்து வளர்ச்சி பெறும் என்பது திண்ணம். 

No comments:

Post a Comment